தாய் சடலத்துடன் 10 நாள் இருந்த மகள்: காட்டிக் கொடுத்த துர்நாற்றம்!


உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ இந்திரா நகரைச் சேர்ந்தவர் சுனிதா தீட்சித். இவர் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகள் அங்கிதா தீட்ஷித் (26).

இவர்களது வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்ததாக அக்கம் பக்கத்தினர் லக்னோ போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்த போது அந்த வீட்டின் கதவு உள்புறம் பூட்டப்பட்டிருந்தது. ஆனால், வீட்டின் உள்ளே சத்தம் கேட்டது. இதையடுத்து கதவை உடைத்துக்கொண்டு உள்ளே போலீஸார் சென்றனர். அப்போது ஒரு இருட்டு அறையில் அங்கிதா தீட்ஷித் இருந்தார். அவர் மனநிலை பாதிக்கப்பட்டது போல் இருந்தது. அடுத்த அறையில், சுனிதா தீட்சித்தின் உடல் இருந்தது. அவர் இறந்து பத்து நாட்களுக்கு மேலிருக்கும் என போலீஸார் தெரிவித்தனர்.

இதையடுத்து சுனிதா தீட்சித்தின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர்களின் அறிக்கை வந்த பிறகே உயிரிழந்ததற்காக காரணம் தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர். அங்கிதாவையும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x