இரவில் பெண்ணுக்கு நடந்த கொடுமை... உயிர் தப்பிய மனைவி: தூக்கத்திலிருந்தபோது கணவன் வெறிச் செயல்


சாலையோரத்தில் தூங்கிக் கொண்டிருந்த மனைவி உள்பட 2 பெண்களை கத்தியால் குத்திய கணவரை காவல் துறையினர் கைது செய்தனர். இதில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தாா்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நேதாஜி சாலையோரம் வசித்து வந்தவர் தனலட்சுமி. 4 மாதங்களுக்கு முன்பு தனலட்சுமியை திருமணம் செய்துக் கொண்டார் திருவண்ணாமலையை சேர்ந்த தேவேந்திரன். திருமணம் முடிந்த நாள் முதல் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், கணவரை பிரிந்து அங்குள்ள சாலையோரத்தில் வசித்து வந்துள்ளார் தனலட்சுமி. அப்போது, கெளசர் என்ற பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இரவு நேரத்தில் இரண்டு பேரும் சாலையோரத்திலேயே படுத்து தூங்கி வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று இரவு இரண்டு பேரும் சாலையோரத்தில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த தேவேந்திரன், மனைவி எங்கு படுத்திருக்கிறாள் என்று தெரியாமல் தூங்கிக் கொண்டிருந்த 2 பெண்களை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில், கெளசர் என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த மனைவி தனலட்சுமி மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்த காவல் துறையினர் விரைந்து வந்து தேவேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மனைவி என நினைத்து வேறொரு பெண் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஆம்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x