மோதிய சரக்கு வேன்... பறிபோன தம்பதியின் உயிர்: சாலையை கடக்கும் போது நடந்த விபரீதம்


விபத்து நடந்த சாலையில் கிடக்கும் சரக்கு வேன்

ஒட்டன்சத்திரம் அருகே சரக்கு வேன் மோதியதில் கணவன்-மனைவி உட்பட 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் இருந்து கோயம்புத்தூருக்கு சரக்கு வேன் ஒன்று இன்று காலை கிளம்பியது. ஒட்டன்சத்திரம், தங்கச்சியம்மாபட்டி அருகே சென்ற போது அப்பகுதியில் சாலையை கடக்க முயன்ற டூவீலர் மீதும், சாலையில் நின்று கொண்டிருந்தவர் மீதும் சரக்கு வேன் மோதியது. இதில், டூவீலரில் பயணம் செய்த கணவன்-மனைவி உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வேன் நிலை தடுமாறி சாலையில் சாய்ந்தது.

இது தொடர்பாக, வழக்கு பதிவு செய்த அம்பிளிக்கை போலீஸார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், இறந்த தம்பதியினர் ஹவுசிங்போர்ட் பகுதியைச் சேர்ந்த சந்திரன்-சந்திரகலா தம்பதியினர் என்றும், சாலையை கடக்க முயன்றவர் ஒத்தையூரைச் சேர்ந்த கருப்பசாமி என்பதும் தெரியவந்தது. மேலும், சரக்கு வேன் ஓட்டுநர் சதீஸ் என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீஸார் சதீஸிடம் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

x