‘இத்துடன் காதலை முடித்துக் கொள்ளலாம்’: காதலி கூறியதால் காதலன் வெறிச்செயல்!


காதலைத் தொடர விரும்பவில்லை எனக்கூறிய காதலியை கத்தியால் குத்திக் கொலை செய்த காதலனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தெற்கு கோவாவைச் சேர்ந்தவர் கிஷன் கலங்குட்கர்(26). இவரும் கல்லூரி மாணவியும் காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் வெல்சான் கடற்கரையில் சென்ற போது திடீரென அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது தன்னிடமிருந்த கத்தியால் தனது காதலியை கிஷன் சரமாரியாக குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்த தகவலறிந்த போலீஸார் விரைந்து வந்து கிஷனை கைது செய்தனர். விசாரணையில்,” காதலைத் தொடர விரும்பவில்லை என்றும், இத்துடன் முடித்துக்கொள்ளலாம் என்றும் காதலி கூறியதால் ஆத்திரமடைந்து அவரை கத்தியால் பலமுறைக் குத்திக் கொலை செய்து பிணத்தைப் புதரில் வீசினேன்” என்று கிஷன் கூறினார். கொல்லப்பட்ட மாணவியின் கடலைக் கைப்பற்றி பிரேத பரிசோனைக்காக போலீஸார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x