மனைவியைத் தேடி வந்த போது அவர் இல்லாததால் கோபத்தில் மாமியாரை, மருமகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைமறைவாக உள்ள மருமகன் ரமேஷை காவல்துறையினர் தேடிவருகிறார்கள்.
ஆந்திரா மாநிலம், காக்கிநாடா பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரின் மனைவி திவ்யாவுக்கும் இவருக்கும் பல மாதங்களாகக் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. திவ்யாவின் நடவடிக்கைகளால் சந்தேகமடைந்த ரமேஷ் அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பாகவே, கணவனைப் பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார் திவ்யா. இந்த நிலையில் நேற்று திவ்யாவைப் பார்ப்பதற்காக மாமியார் வீட்டிற்கு ரமேஷ் சென்றுள்ளார்.
அப்போது திவ்யா வீட்டில் இல்லாததைக் கண்டு ஆத்திரமடைந்துள்ளார். திவ்யா ஹைதராபாத் சென்றுள்ளதாக அவரது மாமியார் வெங்கடரமணம்மா தெரிவித்துள்ளார். இதையடுத்து இருவருக்குமிடையே தகராறு முற்றியது. ஆத்திரமடைந்த ரமேஷ் கையிலிருந்த கத்தியால் மாமியாரை குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே வெங்கடரணம்மா இறந்தார். இந்த சம்பவத்தை அடுத்து ரமேஷ் தலைமறைவானார். வெங்கடரணம்மாவின் உடலைக் கைப்பற்றிய பிதாபுரம் நகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ரமேஷை தேடி வருகின்றனர்.