வேறு பெண்ணுடன் ஏன் பேசுகிறாய்?- தட்டிக்கேட்ட காதலியை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கிக் கொன்ற காதலன்


செல்போனில் வேறு பெண்ணுடன் பேசியதைக் தட்டிக் கேட்ட காதலியை கொலை செய்த காதலனை மோகனூர் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், மோகனுார் அடுத்த நொச்சிப்பட்டியில் தனியார் கோழிப்பண்ணை உள்ளது. இங்கு சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பலர் பணிபுரிந்து வருகின்றனர். இந்தப் பண்ணையில் பணிபுரிய சத்தீஸ்கரை சேர்ந்த ஒருவர் மூலம் அதே மாநிலத்தைச் சேர்ந்த சோமனுபோயன் (17), அவரது காதலி போதிமாண்டவி (16) ஆகிய இருவரும் வேலை கேட்டு வந்துள்ளனர்.

இருவரையும் விசாரித்த பண்ணை உரிமையாளர் குழந்தைத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவதில்லை எனக் கூறி இருவரையும் திருப்பி அனுப்பியுள்ளார். இச்சூழலில் இருவரும் பண்ணையில் உள்ள நண்பருடன் தங்கியிருந்துள்ளனர். இன்று காலை சோமனுபோயன் தனது செல்போனில் வேறொரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தார். இதைக்கண்ட போதிமாண்டவி, சோனுபோயனிடம் தகராரறில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சோமனுபோயன், தனது காதலி போதிமாண்டவியை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த மோகனூர் காவல் துறையினர் சோமனுபோயனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x