7 பிரிவுகளில் வழக்கு பதிவு: கம்பி எண்ணும் `ரூட் தல' மாணவர்கள்


ரூட் தல மோதல் விவகாரத்தில் 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் நேற்று முன்தினம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பூந்தமல்லி ரூட் மாணவர்கள் மற்றும் திருத்தணி ரூட் மாணவர்கள் என 20க்கும் மேற்பட்டோர் கத்தி, பாட்டில் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்த மோதல் தொடர்பாக திருவள்ளூரை சேர்ந்த கிஷோர் (21), நசரத்பேட்டையைச் சேர்ந்த பிரேம்குமார் (20), ரெட்டேரியை சேர்ந்த மாரிமுத்து (20), தமிழ்செல்வன் (20) ஆகிய 4 மாணவர்களை கீழ்ப்பாக்கம் போலீஸார் கைது செய்தனர்.

அவர்கள் மீது ஆயுத தடைச் சட்டம் உட்பட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர், சிறையில் அடைத்தனர்.

x