24 மணி நேரமும் விளையாட்டு... மரணத்திற்குப் பிறகும் வந்த மெசேஜ்!: பப்ஜியால் பறிபோன மாணவனின் உயிர்


சென்னையில் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு வரை பப்ஜி விளையாடியதும், அவர் இறந்த பின் அந்த விளையாட்டு தொடர்பான மெசேஜ் வந்ததும் போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரத்தை அடுத்த பீர்க்கன்காரணையைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ராகவன். இவரது இரண்டாவது மகன் அருண்குமார் கிண்டியில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த மூன்று வருடங்களாக பப்ஜி விளையாடி வந்துள்ளார். கடந்த ஒரு வாரமாக கல்லூரி செல்லாமல் பப்ஜி விளையாடியுள்ளார்.

இந்த நிலையில், அவரின் தாய், தந்தை வேலைக்குச் சென்றுள்ளனர். அவரது சகோதரர் வெளியே சென்று விட்டு வீடு திரும்பிய போது அருண்குமார் வீட்டில் தூங்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த பீர்க்கன்காரணை போலீஸார், அருண்குமார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அருண்குமார் தூக்கில் தொங்கும் முன்பு வரை பப்ஜி விளையாடியதாகவும், இறந்தபிறகும் கூட அந்த விளையாட்டு தொடர்பாக மெசேஜ் வந்துகொண்டு இருந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

x