பயங்கரவாதிகள் மீது துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி


காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் சண்டை நிகழ்ந்தது. இந்தத் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

புல்வாமா மாவட்டம் சோபியானில் உள்ள துர்க்வாங்கம் மற்றும் லிட்டர் புல்வாமா இணைப்புப் பாலம் அருகே எல்லைப் பாதுகாப்புப் படைக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே இன்று மோதல் நடந்தது. இருதரப்பினரும் மாறி மாறி துப்பாக்கிச்சூடு நடத்தினர். அப்போது துர்க்வாங்கத்தைச் சேர்ந்த பொதுமக்களில் ஒருவரான, ஷோயிப் அஹ் கனி என்பவர் மீது துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்திருந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனிடையே எல்லைப் பாதுகாப்புப் படையினரின் பதிலடித் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத பயங்கரவாதிகள் தோட்டங்களுக்குள் புகுந்து தலைமறைவாகினர். இதையடுத்து தீவிர தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டிருக்கின்றனர்.

x