'என்னை திருமணம் செய்து கொள்... சொத்துக்களைக் கொடு!': ஆபாச வீடியோவை வைத்து மிரட்டியவரை கொன்ற பெண்!


ஸ்வேதா ரெட்டி

திருமணம் செய்து கொள்வதுடன் சொத்துக்களைத் தரா விட்டால் ஆபாச வீடியோ, புகைப்படங்களை வெளியிடுவேன் என்று மிரட்டிய ஃபேஸ்புக் நண்பனை, தனது நண்பர்கள் உதவியுடன் இளம்பெண் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பிரசாந்தி ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்வேதா ரெட்டி(32). திருமணமான இவருக்கு 2018-ம் ஆண்டு ஃபேஸ்புக் மூலமாக ஹைதராபாத் அம்மர்பேட்டையைச் சேர்ந்த யாஸ்மா குமார்(32) பழக்கமானார். புகைப்பட கலைஞரான யாஸ்மா குமாருடன் சுவேதா ரெட்டி நெருக்கமாக பழகியுள்ளார். இருவரும் செல்போன் மூலம் அடிக்கடி பேசி கூடா நட்பும் ஏற்பட்டுள்ளது.

யாஸ்மா குமார்.

யாஸ்மா குமார் கேட்டுக் கொண்டதால் வீடியோ காலில் பேசிய போது ஸ்வேதா ரெட்டி அரைகுறை உடையுடன் போஸ் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை புகைப்படம், வீடியோவாக ரெக்கார்டு செய்து வைத்துக் கொண்ட யாஸ்மா குமார், தன்னை திருமணம் செய்து கொள்வதுடன், சொத்துக்களை தர வேண்டும் என்றும், இல்லாவிட்டால் உன் கணவன் உள்ளிட்ட உறவினர்களுக்கு ஆபாச வீடியோக்கள், புகைப்படங்களை அனுப்பி விடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதனால் அச்சமடைந்த ஸ்வேதாரெட்டி, யாஸ்மா குமாரைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். தனது மற்றொரு ஃபேஸ்புக் நண்பரான ஓய்வு பெற்ற கல்லூரி முதல்வர் அசோக்கிடம் இப்பிரச்சினையைக் கூறியுள்ளார். அவர் தனது நண்பர் கார்த்திக்குடன் ஸ்வேதா ரெட்டி வீட்டிற்குச் சென்றுள்ளார். அவர்கள் திட்டமிட்டபடி யாஸ்மா குமாரை ஸ்வேதாரெட்டி போன் செய்து தன் வீட்டிற்கு அழைத்துள்ளார். அங்கு சென்ற யாஸ்மா குமாரை சுத்தியலால் அடித்துக் கொலை செய்து உடலை சாலையில் வீசியுள்ளனர். அடையாளம் தெரியாத சடலம் என்று போலீஸார் விசாரணை ஆரம்பித்தது. ஆனால், அதன் பின் இது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை என தெரிய வந்தது. யாஸ்மா குமாருடன் ஸ்வேதாரெட்டி நெருக்கமாக இருந்ததை அறிந்த போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதையடுத்து கொலையில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரையும் போலீஸார் கைது செய்தனர். ஃபேஸ்புக் மூலம் ஏற்பட்ட நட்பு, கூடாநட்பாக மாறியதால் அது கொலையில் முடிந்துள்ளது.

x