அடையாறு ஆற்றில் வீசப்பட்ட திமுக பிரமுகரின் தலையை தேடும் போலீஸ்!


சென்னை மணலியை சேர்ந்த திமுக பிரமுகர் சக்கரபாணி (65) கடந்த 10-ம் தேதி முதல் காணாமல் போனதாக என அவரது மகன் மணலி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து, சக்கரபாணியின் செல்போன் எண்ணை காவல் துறையினர் ஆராய்ந்த போது ராயபுரம் கிரேஸ் கார்டன் பகுதியை காண்பித்தது. பின்னர், காவல் துறையினர் அங்குள்ள ஒரு வீட்டில் சாக்கு மூட்டையில் 10 துண்டுகளாக வெட்டி சக்கரபாணி கொலை செய்திருப்பதை கண்டறிந்தனர்.

மேலும் தகாத உறவால் ஏற்பட்ட தகராறில் தமீம் பானு, அவரது சகோதரர் வாஷிம்பாஷா மற்றும் ஆட்டோ ஓட்டுநர் டில்லிபாபு ஆகியோர் கூட்டாக சேர்ந்து திமுக பிரமுகர் சக்கரபாணியின் உடலை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து ராயபுரம் காவல் துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட சக்கரபாணியின் தலையை அடையாற்றில் வீசியதாக வாஷிம் பாஷா தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்த வழக்கில் ஆற்றில் வீசப்பட்ட தலை முக்கியம் என்பதால் நேற்றிரவு வாஷிம் பாஷாவை காவல் துறையினர் அடையாறு அழைத்து சென்று தலை தூக்கிவீசப்பட்ட இடத்தை அடையாளம் காட்ட செய்தனர். அதனடிப்படையில் இன்று காலை முதல் தீயணைப்பு துறையினர் உதவியுடன் ராயபுரம் காவல் துறையினர் அடையாறில் வீசப்பட்ட தலையை தீவிரமாக தேடி வருகின்றனர்.

காலை 5 மணி முதல் 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் திருவான்மியூர், அடையாறு, சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆற்றில் தலையை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஸ்கூபா வீரர்களும் ஆற்றின் குதித்து தீவிரமாக தேடி வருகின்றனர். ஆனால் இதுவரை சக்கரபாணி தலை கிடைக்கவில்லை.

x