ரஷ்யா சிறுமியை வன்கொடுமை செய்த விடுதி ஊழியர்: சுற்றுலாவிற்கு வந்த இடத்தில் நடந்த கொடூரம்


கோவாவிற்கு சுற்றுலா வந்த 12 வயது ரஷ்யாவைச் சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த விடுதி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரஷ்யாவைச் சேர்ந்த பெண்ணும், அவரது 12 வயது மகளும் கோவாவிற்கு சுற்றுலா வந்தனர். இதையடுத்து அவர்கள் வடக்கு கோவாவில் உள்ள அரம்போல் பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்தனர். சிறுமியை அறையில் விட்டு விட்டு அவரது தாய் பொருட்கள் வாங்க கடைக்குச் சென்றிருந்தார்.

அந்த நேரத்தில் விடுதியில் பணிபுரியும் நபர் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதுகுறித்து அவரது தாய் போலீஸில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், விடுதியில் வேலை செய்த கர்நாடகாவைச் சேர்ந்த ரவி லமானி(23) சிறுமியை பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. கர்நாடகா மாநிலம் கடக் பகுதியில் பதுங்கியிருந்த அவரை போலீஸார் கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x