25 ஆயிரம் மெகாவாட் மின்சாரக் கம்பியைத் தொட்ட முதியவர்... பதறிய ரயில்வே போலீஸ்: நடந்தது என்ன?


நள்ளிரவு நேரத்தில் 25 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் செல்லும் மின் ரயிலில் ஏறி முதியவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அரக்கோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்தில் நேற்று நள்ளிரவில் நடைமேடை 7-ல் மின்சார ரயில் நின்றிருந்தது. அப்போது கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளங்கோ (69) என்ற முதியவர் ரயில் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

25 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் செல்லும் கம்பியை முதியவர் தொட முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்பு காவலர்கள் உடனடியாக நிலைய அதிகாரியை தொடர்பு கொண்டு ரயில்வே ஊழியர்களை வரவழைத்து சாதுரியமாக செயல்பட்டு முதியோரை பத்திரமாக மீட்டனர்.

முதியவரின் உயிரைக் காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு காவலர்களை பொதுமக்கள் பாராட்டினர். எதற்காக இளங்கோ தற்கொலைக்கு முயன்றார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அரக்கோணம் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

x