பள்ளி கட்டிட ஜன்னலில் தாவணியில் தூக்கில் தொங்கிய மாணவன்: கொலையா என விசாரணை?


பள்ளியின் பின்புற கட்டிட ஜன்னலில் தாவணியில் தூக்கில் தொங்கிய நிலையில் மர்மமான முறையில் மாணவன் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவன் கொலை செய்யப்பட்டானா அல்லது தற்கொலை செய்து கொண்டானா என போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

உத்தரப்பிரதேசம் ராணிப்பட்டி கிராமத்தில் பள்ளி உள்ளது. இந்த பள்ளி கட்டிடத்தின் பின்புறம் ஒரு ஜன்னலில் தாவணியில் தூக்குமாட்டிய நிலையில் 8-ம் வகுப்பு மாணவன் மர்மமான முறையில் நேற்று இறந்து கிடந்தான். அவ்வழியே சென்றவர் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாக போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். விரைந்து வந்த போலீஸார், மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவன் கொலை செய்யப்பட்டானா அல்லது தற்கொலை செய்து கொண்டானா என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து பள்ளி முதல்வர் கூறுகையில்," இறந்து போன மாணவர் கடந்த சில நாட்களாகவே வகுப்புக்கு வரவில்லை. பள்ளி வளாகத்திற்கு அவர் எப்போது வந்தார் என்று தெரியவில்லை" என்று கூறினார். பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் மாணவன் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x