மின்னல் வேகத்தில் வந்த பைக்: சாலையில் தூக்கி வீசப்பட்ட வாலிபர்


சாலையில் மின்னல் வேகத்தில் பைக்கில் வந்த வாலிபர், ஆட்டோவில் மோதி தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூர் செங்குன்றம் சாலை ஒரகடம் பகுதியில் வாலிபர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் விலை உயர்ந்த பைக்கில் மின்னல் வேகத்தில் வந்து கொண்டிருக்கிறார். அப்போது, முன்னால் சென்ற ஆட்டோ மீது பைக் உரசியது. இதில் நிலை தடுமாறிய வாலிபர் சாலையில் தூக்கி வீசப்பட்டார். இந்த காட்சி முழுவதையும் மற்றொரு நபர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

x