`வேண்டாம் என்றேன், கேட்கவில்லை'- தங்கையை சுட்டுக் கொன்ற அண்ணன் அதிர்ச்சி வாக்குமூலம்


நடனம் மற்றும் மாடலிங் தொழிலை செய்ததற்காக 21 வயது தங்கையை அவரது சகோதரரே சுட்டுக் கொன்றுள்ளார்.

பாகிஸ்தான், லாகூரிலிருந்து 130 கிமீ தொலைவில் உள்ள ரெனாலா குர்த் ஒகாராவைச் சேர்ந்தவர் சிட்ரா. இவர் உள்ளூர் ஆடை பிராண்டிற்காக மாடலிங் மற்றும் பைசலாபாத் நகரின் திரையரங்குகளில் நடனமாடும் தொழிலை செய்துவந்தார். இந்த தொழில் அவரின் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லையாகும். இந்த தொழிலை விட்டுவிடும்படி குடும்பத்தினர் தொடர்ந்து சிட்ராவை வற்புறுத்தி வந்துள்ளனர். ஆனால், குடும்பத்தினரின் அட்வைசை தட்டிக்கழித்த சிட்ரா, தொடர்ந்து நடனமாடி வந்துள்ளார்.

இந்த நிலையில், சிட்ரா தனது குடும்பத்துடன் ரமலான் பண்டிகையை கொண்டாடுவதற்காக பைசலாபாத்தில் இருந்து வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, அவரது பெற்றோரும் சகோதரர் ஹம்சாவும் நடனமாடும் தொழிலை விடும்படி தகராறு செய்துள்ளனர். அப்போது, அவர்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஹம்சா தான் வைத்திருந்த துப்பாக்கியால் தங்கை சிட்ராவை சுட்டுக் கொன்றார்.

இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், ஹம்சாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிட்ராவின் நடன நிகழ்ச்சியை உறவினர் ஒருவர் மொபைல் போனில் ஹம்சாவுக்கு அனுப்பியுள்ளார். அதனைப் பார்த்த ஆத்திரத்தில் தனது சகோதரியை சுட்டுக் கொன்றதாக ஹம்சா வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல் துறை அதிகாரி ஃப்ராஸ் ஹமீத் தெரிவித்தார்.

x