வன்கொடுமை செய்த தந்தை... வீடியோவை வெளியிட்டு நீதி கேட்ட மகள்!


பிஹாரின் சமஸ்திபூர் மாவட்டத்தின் ரோஸெரா பகுதியில் வசிக்கும் 50 வயது ஆசிரியர் ஒருவர் தனது 18 வயது மகளை, தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துவந்திருக்கிறார். அத்துடன் அப்பெண்ணை மிரட்டியும் வந்திருக்கிறார். அப்பெண்ணின் தாயாருக்கு இது குறித்து தகவல் தெரிந்திருந்தும் இதைக் கண்டிக்கவில்லை எனத் தெரிகிறது. பெண்ணின் தாய்மாமனும் இதுகுறித்து வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டிவந்திருக்கிறார்.

சொந்தத் தந்தையே தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்துவந்த நிலையில், பெற்ற தாயும் தன்னைக் காக்க முன்வராததால் அந்த இளம்பெண் வேதனையில் தவித்திருக்கிறார். ஒருகட்டத்தில், தனக்கு நேரும் கொடுமையை வெளியுலகத்துக்கு அம்பலப்படுத்த முடிவுசெய்த அவர், தனது அறையில் கேமராவை மறைத்துவைத்தார். அதில் அந்தப் பெண்ணை அவரது தந்தை பாலியல் வன்கொடுமை செய்யும் காட்சிகள் பதிவான நிலையில், அவற்றை சமூக ஊடகங்களில் அந்தப் பெண் வெளியிட்டார். அதைப் பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் தனது தந்தை மீது அப்பெண் போலீஸில் புகார் செய்தார். இதையடுத்து போலீஸார் அப்பெண்ணின் தந்தையைக் கைதுசெய்தனர். இதில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்றும் போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

x