விக்னேஷ் கொலையில் 5 காவலர்களை உடனே கைது செய்யவும்: டிஜிபிக்கு ஆணையம் உத்தரவு


விக்னேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய 5 காவலர்களையும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்து அவர்களை தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய தமிழக டிஜிபிக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

ஏப்ரல் 18-ம் தேதி இரவு சென்னை கெல்லீஸ் சந்திப்பில் தலைமைச் செயலக காலனி போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்றை சோதனை செய்தபோது அதில் இருந்த இருவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். அவர்களை சோதனையிட்ட காவல்துறையினர் 5 கிராம் கஞ்சா, கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் ஒருவர் திருவல்லிக்கேணியை சேர்ந்த ரமேஷ் என்பதும் மற்றொருவர் பட்டினப்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ் என்பதும் தெரியவந்தது. இதில் கஞ்சா, கத்தியை மறைத்து வைத்திருந்த விக்னேஷ் சென்னை மெரினா கடற்கரையில் குதிரை ஓட்டுபவர் என தெரியவந்தது. அப்போது, காவல்நிலையத்தில் திடீரென விக்னேஷுக்கு வலிப்பு ஏற்பட்டதை அடுத்து உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் உயிரிழந்து விட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

x