சிதறிய ரத்தக்கறை.. கண்டுபிடிக்கப்பட்ட வாலிபர் உடல்: வேலூர் கோட்டையில் அதிர்ச்சி!


வேலூரில் வாலிபரை கல்லால் தாக்கி கொலை செய்து கோட்டை அகழியில் தூக்கி வீசிய மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

வேலூர் கோட்டை அகழியில் இன்று காலை ஆண் பிணம் மிதப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. காவல் ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையிலான போலீஸார், தீயணைப்புத்துறை உதவியுடன் அகழியில் இருந்த வாலிபர் பிணத்தை மீட்டனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், " அகழியின் மேல்பகுதியில் ஆங்காங்கே ரத்தம் சிதறியிருந்தது. ரத்தம் படிந்த கல் ஒன்றும் கிடந்தது. இதைக் கொண்டு விசாரித்ததில், கொலை செய்யப்பட்ட வாலிபரை பெரியார் பூங்காவில் இருந்து இழுத்து வந்து கல்லால் நெற்றியில் தாக்கி கொன்று அகழியில் வீசியது தெரிய வந்துள்ளது. முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா, கள்ளக்காதல் காரணமாக கொலை நடந்ததா என விசாரித்து வருகிறோம்" என்றனர்.

x