வேலைக்கு சேர்ந்த முதல் நாளிலேயே முதலாளிக்கு அதிர்ச்சி கொடுத்த ஊழியர்


சென்னையில் பெட்ரோல் பங்க்கில் வேலைக்கு சேர்ந்த முதல் நாளிலேயே ஊழியர் ஒருவர், அதன் உரிமையாளரை பதறவைத்துவிட்டு சென்றுவிட்டார்.

செங்கல்பட்டை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள பெட்ரோல் பங்க்கில் வேலைக்கு சேர்ந்துள்ளார். முதல் நாளிலேயே தனது வேலையை சுறுசுறுப்பாக செய்துள்ளார் மாரியப்பன். இதனை பார்த்து சக ஊழியர்கள் ஆச்சரியப்பட்டுள்ளனர்.

காலை முதல் மாலை வரை சுறுசுறுப்பாக வேலை செய்த மாரியப்பன், அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் பங்க் உரிமையாளரை அதிரவைத்து விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். பெட்ரோல் பங்க்கில் இருந்த 14 ஆயிரத்தை திருடி கொண்டு சென்றுவிட்டார் மாரியப்பன். இது குறித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர் காவல் துறையில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், சிசிடிவி கேமரா மற்றும் செல்போன் சிக்னலை வைத்தும் மாரியப்பனை கண்டுபிடித்து கைது செய்தனர். அப்போது, திருடிய ரூ.14 ஆயிரத்தில் ரூ.12,900க்கு மதுபானம் வாங்கிக் குடித்ததாக கூறியுள்ளார் மாரியப்பன். மீதியிருந்த 1100 ரூபாயை மட்டும் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் மாரியப்பன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

x