நம்பி சென்ற இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை: நள்ளிரவில் நடந்த கொடுமை


தஞ்சாவூரில் இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நான்கு இளைஞர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சாமிநாதன்

கொடியரசன்

தஞ்சாவூர் அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 22 வயது இளம் பெண் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 11-ம் தேதி இரவு பணி முடிந்து வீட்டுக்கு திரும்புவதற்காக நின்று கொண்டிருந்த அந்த பெண்ணுக்கு அறிமுகமான மேட்டுப்பட்டியை சேர்ந்த கொடியரசன் (25) என்பவர் ஊருக்கு அழைத்துச் செல்வதாக கூறி தனது இரு சக்கர வாகனத்தில் ஏற்றிசென்றார்.

செல்லும் வழியில் முந்திரி தோப்புக்குள் அழைத்து சென்று தனது நண்பர்கள் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த சாமிநாதன் (24), சுகுமாரன் (25), கண்ணன் (25) ஆகியோருடன் இணைந்து அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் அந்த பெண்ணின் சாதியை சொல்லி திட்டி, இந்த விஷயத்தை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டி உள்ளனர். தொடர்ந்து நள்ளிரவில் அந்த பெண்ணை அவரது வீட்டுக்கு அருகில் விட்டுவிட்டு சென்றுவிட்டனர்.

கண்ணன்

சுகுமார்

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் வல்லம் போலீஸில் புகார் செய்தார். இதன் பேரில் வன்கொடுமை, சாதியை சொல்லி திட்டுதல் உட்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த வல்லம் டிஎஸ்பி பிருந்தா அந்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

அதைத்தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்பிரியா உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் பிராங்க்ளின் தலைமையிலான போலீஸார் கொடியரசன் உட்பட 4 பேரையும் நேற்று ஸ்ரீரங்கத்தில் தலைமறைவாக இருந்த போது கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை பாலியல் வழக்கில் தொடர்புடையவர்களுக்கு ஆதரவாக அவர்களின் உறவினர்கள் சுமார் 8 பேர் வல்லம் காவல் நிலையத்துக்கு வந்து, பொய் வழக்கு எனக்கூறி தங்கள் மீது பெட்ரோல் ஊற்றி கொண்டு ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர். உடன் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் பெட்ரோல் வைத்திருந்த பாட்டிலை பறித்து அவர்கள் அனைவரையும் போலீஸ் வாகனத்தில் ஏற்றி தமிழ்ப்பல்கலைக்கழக காவல் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.

x