தி.மலை போலீஸில் தினமும் கையெழுத்து போடணும் : பெரியகுளம் அதிமுக நிர்வாகிக்கு கோர்ட் உத்தரவு!


பெரியகுளத்தில் 182 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிப்பு வழக்கில் கைதான அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளருக்கு உயர்நீதிமன்ற மதுரைகிளை நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் 182 ஏக்கர் அரசு நிலம் அதிகாரிகள் துணையுடன் பலருக்கு முறைகேடாக பட்டா மாறுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அதிமுகவினர் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் கைதான அதிமுக முன்னாள் ஒன்றிய செயலர் அன்னபிரகாஷ், ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி முரளிசங்கர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அன்னபிரகாஷ், திருவண்ணாமலையில் 30 நாட்கள் தங்கியிருந்து, தினமும் காலை கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

x