நடுரோட்டில் வாலிபருக்கு நடந்த சோகம்... பதைபதைக்கும் சிசிடிவி காட்சி


இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் நிலை தடுமாறி விழுந்துள்ளார். அப்போது, வேகமாக வந்த அரசுப் பேருந்து வாலிபரின் தலையில் ஏறி இறங்கியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கோவை மாவட்டம், சூலூரை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் மதுரையில் இருந்து கோவைக்கு தனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். கோவில்பாளையம் அருகே வந்தபோது நிலை தடுமாறி வாலிபர் மாரிமுத்து கீழே விழுந்தார்.

அப்போது, வேகமாக வந்த பேருந்து அவர் தலையில் மீது ஏறி இறங்கியது. இதில் மாரிமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது விபத்து குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாக பதைபதைக்க வைத்துள்ளது.

x