தங்களது கம்பெனி பெயரில் குழந்தைகள் புகைப்படத்தை மார்பிங் செய்து தவறாக சித்தரித்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சினிமா பின்னணி பாடகி சின்மயி காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டை ஜானிகி அவென்யூ பகுதியில் வசிப்பவர் பிரபல சினிமா பின்னண பாடகி சின்மயி ஸ்ரீபடா (37). இவர் நேற்று அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், நானும் எனது கணவர் ராகுல் ரவீந்திரனும் இணைந்து ஹீரோ ஹோண்டா போட்டோ ஷூட் கம்பெனி நடத்தி வருவதாகவும், எங்கள் கம்பெனி பெயரை பயன்படுத்தி தேவ்ராகுல் என்பவர் பெண் குழந்தைகள் புகைப்படத்தை மார்பிங் செய்து தவறாக சித்தரித்து வெளியிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு தங்களது நிறுவனத்தின் பெயரை கெடுக்கும் நோக்கிலும், களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வரும் தேவ்ராகுல் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகார் மனுவில் கேட்டு கொண்டுள்ளார். இப்புகாரின் பேரில் அபிராமபுரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.