ஓடும் பைக்கில் காதல் ஜோடி விபரீத செயல்: அதிர்ந்த வாகன ஓட்டிகள்


ஓடும் பைக்கில் காதல் ஜோடியின் செயலை பார்த்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடற்கரை, பூங்கா, பார்க் உள்ளிட்ட பகுதிகளில் காதல் ஜோடிகள் இல்லாத நாட்களே இருக்காது என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அவர்கள் படையெடுக்க தொடங்கிவிட்டனர். கரோனா காலத்தில் காதலர்கள் செய்த செயல்கள் அனைவரையும் முகம் சுளிக்கவைத்தது. இதனால், காவல் துறையினர் காதலர்களுக்கு கிடுக்கிபிடி போட்டு வருகின்றனர். அதையும் மீறி காதலர்கள் எல்லை மீறி செயல்பட்டு வருகின்றனர். இப்படி ஒரு எல்லை மீறிய சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.

சாம்ராஜ்நகர் மாவட்டம், குண்டலுபேட்டை டவுன் அருகே செல்லும் சாலையில் ஒரு காதல் ஜோடி ஒன்று இரு சக்கர சென்று கொண்டிருந்தது. திடீரென, இளம்பெண் பைக்கின் முன்பக்கத்தில் அமர்ந்து கொண்டார். அவர், தனது காதலனை பார்த்தவாறு அமர்ந்து இறுக அணைத்துக் கொண்டார். மேலும் பைக்கை நிறுத்தாமல் இருவரும் விபரீத செயலில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். யாரைப் பற்றியும் கவலைப்படாமல் காதல் ஜோடி உல்லாச வானில் பறந்தபடி இரு சக்கர வாகனத்தில் சென்றனர். இதுதொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

x