வாட்ஸ் அப்பில் ஆர்டர்: வீடு, வீடாக சப்ளை!: கஞ்சா கும்பல் சிக்கியது எப்படி?


சென்னையில் வாட்ஸ் அப் மூலம் ஆர்டர் எடுத்து வீடு, வீடாக கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு வரலட்சுமி நகர் பகுதியில் காவல்துறை ஆய்வாளர் சந்திரசேகர் தலைமையில் போலீஸார் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை சோதனையிட்ட போது, அதில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை காரில் கடத்தி வந்த வானகரம் பகுதியைச் சேர்ந்த அவினாஷ் என்பவரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், திரிபுரா மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் கஞ்சா வரவழைத்து அதை சென்னை தண்டையார் பேட்டையைச் சேர்ந்த கமல் என்பவர் பதுக்கி வைப்பார். அங்கிருந்து கஞ்சாவை சிறு,சிறு பொட்டலங்கள் போட்டு வாட்ஸ் அப் குரூப் மூலம் சென்னை முழுவதும் ஆர்டர் பெற்றுள்ளனர். இதன் பின் வாடிக்கையாளர்களுக்கு வீடுகளுக்குச் சென்று கஞ்சாவை விற்பனை செய்தது தெரிய வந்தது. இக்குற்றத்தில் ஈடுபட்ட அவினாஷ், அவரது நண்பர்கள் கமல், பிருதிவிராஜ், பரத்குமார் ஆகியோரை போலீஸார் கைது செய்து அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்தனர். வாட்ஸ் அப் மூலம் ஆர்டர் எடுத்து வீடு, வீடாக கஞ்சா விற்பனை செய்த கும்பல் பிடிபட்டுள்ளது சென்னை காவல்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x