'நான் செல்கிறேன்.. வேறு திருமணம் செய்து கொள்!' - மனைவிக்கு கணவன் அனுப்பிய எஸ்எம்எஸ்


வேலையில்லாத மன உளைச்சலில் பட்டதாரி வாலிபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தான் சாவதற்கு முன்பு வேறு யாரையாவது திருமணம் செய்து கொள் என்று மனைவிக்கு வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்பியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசம் சிந்த்வாரா பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் பிஜ்ஹடே. பி.டெக் பட்டதாரியான இவர் 2000-ம் ஆண்டு சமோடா தில்வாரி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தில்வாரி வனத்துறையில் பணியாற்றுகிறார். ஆனால், சதீஷிக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால் அவர் மனஉளைச்சலில் இருந்துள்ளார். அத்துடன் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த 16-ம் தேதி மனைவி இல்லாத போது, வீட்டில் சதீஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, தனது மனைவி தில்வாரிக்கு வாட்ஸ்அப் மூலம் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், "நான் செல்கிறேன். பணியில் இருக்கும் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்" என்று பதிவிட்டிருந்தார். அத்துடன் வீட்டில் இரண்டு பக்கத்திற்கு அவர் தற்கொலை கடிதம் எழுதி வைத்திருந்ததும் போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சதீஷ் எழுதிய வாட்ஸ்அப் குறுஞ்செய்தி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x