நள்ளிரவு நேரம்... மின்னல் வேகத்தில் வந்த எக்ஸ்பிரஸ்... சிதறிய பயணிகளின் உடல்


பழுதான ரயிலில் இருந்து இறங்கி தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த 6 பயணிகள் மற்றொரு ரயில் மோதி உடல் சிதறி பலியாகினர். இந்த சோக சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.

கோவையில் இருந்து சில்கர் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று கவுகாத்தி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த எக்ஸ்பிரஸ் ரயில் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம், படுவா என்ற கிராமத்தில் திடீரென ஏற்பட்ட தொழிற்நுட்ப கோளாறால் நடுவழியில் நின்றது. அப்போது, ரயிலில் இருந்த சில பயணிகள் இறங்கி அருகில் உள்ள தண்டவாளத்தில் நின்றுள்ளனர். நள்ளிரவு நேரம் என்பதால் பயணிகள் சோர்வுடன் காணப்பட்டுள்ளனர்.

அப்போது, திடீரென மின்னல் வேகத்தில் வந்த கோனார்க் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகள் மீது மோதியது. இதில் 6 பயணிகள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 8 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே காவல் துறையினர், உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

x