ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை ஐஐடியில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பட்டியலின மாணவி கடந்த 2017-ம் ஆண்டு உடன் பயின்ற மாணவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் துறையினர்
கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் முன்னாள் ஆராய்ச்சி மாணவர்களான கிங்சுக் தேப் சர்மா, சுபதீப் பேனர்ஜி, மலாய் கிருஷ்ண மகதோ உட்பட 8 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இதனிடையே, இந்த வழக்கில் எஸ்சி, எஸ்டி சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டு கோட்டூர்புரம் உதவி ஆணையர் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவர் விசாரணை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.