கொலைகாரனாகிய கல்லூரி மாணவன்: போலீஸை பதறவைத்த வாக்குமூலம்


மூதாட்டியை கொலை செய்தது ஏன்? என்பது குறித்து கல்லூரி மாணவன் அளித்துள்ள வாக்குமூலம் காவல் துறையினரை பதறவைத்துள்ளது.

கடலூர் மாவட்டம், வேப்பூரை சேர்ந்தவர் மூதாட்டி பட்டாத்தாள். 75 வயதான இவர், கடந்த 6-ம் தேதி கழுத்து நெரித்துக் கொல்லப்பட்ட நிலையில் கிடந்தார். மேலும், அவர் அணிந்திருந்த 5 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இது குறித்து வேப்பூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் சூர்யா மீது காவல் துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

கொலை நடந்த அன்று அடகு கடை ஒன்றில் சூர்யா, நகைகளை வைத்து பணம் வாங்கியது சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இதையடுத்து, சூர்யாவை கைது செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, மூதாட்டியை கொன்று நகையை திருடியதை ஒப்புக்கொண்டுள்ளார். அந்த பணத்தில் செல்போன், வாட்ச், ஆடைகள் வாங்கி ஆடம்பரமாக இருந்துள்ளார். மேலும், ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையான மாணவன் சூர்யா, பணம் இல்லாமல் தவித்துள்ளார். பின்னர் மூதாட்டியை கொன்று நகையை திருட முடிவு செய்துள்ளார். இந்த நகையை அடகு வைத்து பணத்தை பெற்றுக் கொண்டு ஆன்லைன் சூதாட்டம் விளையாடி இருக்கிறார் என்கிற தகவல் எங்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

x