ஆசைக்கு இணங்காவிட்டால்...- மிரட்டிய பேராசிரியர்; அதிரடி காட்டிய மாணவி!


மாணவியை வன்கொடுமை செய்த புகாரில் தலைமறைவாக இருக்கும் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

சேலம் பெரியார் பல்கலைகக்கழகத்தில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருபவர் பிரேம்குமார். இவர் மீது மாணவி ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். அதில், பேராசிரியர் பிரேம்குமார் தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகவும், தனது சாதிப் பெயரை கூறிப் பேசியதால் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும், மேலும் தனது விருப்பத்துக்கு இணங்காவிட்டால் மேற்படி படிக்க விடப்போவதில்லை என்று மிரட்டியதாகவும் புகார் கூறியுள்ளார்.

இந்த புகாரின் பேரில் பேராசிரியர் பிரேம்குமார் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

x