ஹிஜாப் விவகாரம்: நீதிபதிகளுக்குக் கொலை மிரட்டல் விடுத்த இருவர் கைது


ஹிஜாப்

ஹிஜாப் விவகாரத்தில் தீர்ப்பு வழங்கிய கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்குக் கொலை மிரட்டல் விடுத்த தமிழகத்தைச் சேர்ந்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.

கர்நாடகத்தில் ஹிஜாப் தொடர்பாக எழுந்த சர்ச்சையை அடுத்து, இதுதொடர்பில், கர்நாடக உயர் நீதிமன்றத்திலும் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி, நீதிபதிகள் காஜி செய்புன்னேசா மொகியுதீன், கிருஷ்ணா எஸ்.தீச்சித் ஆகியோர் அடங்கிய மூவர் பெஞ்ச் விசாரித்தது. ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரும் கோரிக்கை மனுவை இந்த அமர்வு தள்ளுபடி செய்து.

இந்தத் தீர்ப்புக்கு எதிராக பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளும் போராட்டத்தில் குதித்தன. இந்நிலையில் மனுவைத் தள்ளுபடி செய்ததோடு, ஹிஜாப் அணிவது இஸ்லாத்தின் இன்றியமையாத அங்கம் அல்ல எனவும் தீர்ப்பு கூறிய நீதிபதிகளுக்குக் கொலை மிரட்டல் வந்தது. கர்நாடக போலீஸார் இதுதொடர்பாக விசாரணை நடத்திவந்தனர். இந்நிலையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகளான கோவை ரஹ்மத்துல்லா, தஞ்சையைச் சேர்ந்த ஜமால் முகமது உஸ்மானி ஆகியோரை போலீஸார் கைதுசெய்தனர். இதில் கோவை ரஹ்மத்துல்லாவை திருநெல்வேலியில் வைத்து கைது செய்தனர்.

x