குடும்பத்தினராலேயே பாலியல் வன்முறைக்குள்ளான பள்ளி மாணவி!


குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் குற்றங்கள் மனிதகுலத்தின் அவலம். புணேயில் ஒரு பள்ளி மாணவிக்கு நிகழ்ந்திருக்கும் அவலம் மிக மிகக் கொடூரமானது.

சில நாட்களுக்கு முன், மகாராஷ்டிர மாநிலம் புணேயில் உள்ள ஒரு பள்ளியில் ‘நல்ல தொடுகை கெட்ட தொடுகை’ ( good touch and bad touch) குறித்து மாணவர்களிடம் ஆலோசனை வகுப்பு நடத்தப்பட்டது. அப்போது 11 வயது மாணவி ஒருவர், தனக்கு நிகழ்ந்த கொடுமை பற்றி பகிர்ந்துகொண்டார். பிஹாரைப் பூர்விகமாகக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த அந்த மாணவி சொன்னவை அதிரவைப்பவை.

5 வருடங்களுக்கு முன்னர் அவர்கள் பிஹாரில் இருந்தபோது, அந்தச் சிறுமியிடம் அவரது தந்தை பாலியல் வன்முறையில் ஈடுபட்டிருக்கிறார். 2 ஆண்டுகளுக்கு முன்னர், சிறுமியின் அண்ணனும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறான். அதுமட்டுமல்ல, சிறுமியின் தாத்தாவும், தூரத்து உறவினர் ஒருவரும் அச்சிறுமியிடம் தகாக முறையில் நடந்துகொண்டிருக்கிறார்கள்.

தனக்கு என்ன நடக்கிறது என்பதைக்கூட உணர முடியாத நிலையில் இருந்த அந்தச் சிறுமி சொன்ன தகவல்களின் அடிப்படையில் நால்வரும் பல்வேறு பிரிவுகளின் கீழ் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்படும் என்றும் என்று புணே போலீஸார் தெரிவித்திருக்கின்றனர்.

x