அப்பளம் போல் நொறுங்கிய கார்: பறிபோன 3 உயிர்கள்


ராஜபாளையத்தில் கல்லூரி பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 7 மாணவிகள் அதிருஷ்டவசமாக உயிர் தப்பினர்.

ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த விஜயகுமார்(45) தனது குடும்பத்தினருடன் தென்காசி சென்றுவிட்டு, சொந்த ஊருக்கு மாருதி காரில் திரும்பிக் கொண்டிருந்தார். ராஜபாளையம் அரசு மருத்துவமனை அருகே உள்ள வளைவில் கார் வேகமாக திரும்பியபோது எதிரே வந்த ராஜபாளையம் தனியார் கல்லூரிப் பேருந்து மீது பயங்கரமாக மோதியது.

இதில் கார் பேருந்துக்கு அடியில் புகுந்து, அப்பளம் போல நொறுங்கியது. காரை ஓட்டிவந்த விஜயகுமார், ராஜேஸ்வரி, பெரியக்கா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். கல்லூரி பேருந்தின் ஓட்டுநர் மற்றும் 7 மாணவிகளும் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து ராஜபாளையம் போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

x