தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினையும், திராவிட இயக்க முன்னோடிகளையும் அவதூறாக சித்தரித்து தொடர்ந்து வீடியோக்கள் வெளியிட்டு வந்த அரசு ஊழியர் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகில் உள்ள சங்குருட்டி பகுதியைச் சேர்ந்தவர் சஜிகுமார்(45). ராணுவத்தில் இருந்து 15 ஆண்டுகள் கழித்து விருப்ப ஓய்வில் வந்த இவர், ராணுவ வீரர்களுக்கான இட இதுக்கீட்டில் அரசுப்பணியில் சேர்ந்தவர். இப்போது சஜிகுமார் தென்காசி மாவட்ட ஆதிதிராவிட நலத்துறையில் ஜீப் ஓட்டுனராக இருக்கிறார். இவர் திராவிட இயக்க முன்னோடிகளான கருணாநிதி, எம்.ஜி.ஆர், வீரமணி, மு.க.ஸ்டாலின் ஆகியோரைப் பற்றி அவதூறாக சமூகவலைதளங்களில் வீடியோ வெளியிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து குமரி மாவட்டம், கொல்லங்கோடு போலீஸார் அரசு ஊழியரான சஜிகுமாரை கைது செய்தனர்.