தொல்லை தந்த துணை வார்டன் கைது


திருவண்ணமாலை மாவட்டம், ஆரணி அருகே ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளி வளாகத்தில் உள்ள விடுதியில் 110 மாணவர்கள் தங்கி படித்துவருகின்றனர்.

இங்கு துணை வார்டனாக தூத்துக்குடியைச் சேர்ந்த துரைப்பாண்டியன் பணியாற்றி வருகிறார். அவர் மாணவர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து குழந்தைகள் பாதுகாப்புக் குழுவான சைல்டு லைனுக்கு மாணவர்கள் தகவல் தெரிவித்தனர்.

இது தொடர்பாக துரைப்பாண்டியனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில், அவர் மாணவர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து சேத்துப்பட்டு போலீஸார் அவரைக் கைது செய்தனர்.

x