ஆன்லைனில் விஷம் வாங்கிக் குடித்து மாணவர் தற்கொலை


தந்தை தினமும் குடித்து விட்டு அம்மாவிடம் சண்டைபோட்டு வந்ததால் வேதனையில் கல்லூரி மாணவன் விஷம் குறித்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், கலையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன், டாஸ்மாக் ஊழியர். இவரது மகன் பிருத்விராஜன் (20), மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்துவந்தார். இவர் தான் தங்கியிருந்த கல்லூரி மாணவர் விடுதி அறையில் பூச்சி மருந்து குடித்து மயங்கிக் கிடந்தார். சக மாணவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று இறந்துபோனார்.

இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், டாஸ்மாக் ஊழியரான நடராஜனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும், அதனால் அவர் குடித்துவிட்டுவந்து தினமும் மனைவியிடம் சண்டை போட்டதாகவும், பெற்றோரை சமாதானப்படுத்த மாணவர் பிருத்விராஜன் எடுத்த முயற்சிகள் தோற்றுப்போனதால் கடும் மன அழுத்தத்தில் இருந்ததும் தெரியவந்தது. விடுதியில் இருந்தபடியே அந்த மாணவர், ஆன்லைன் வாயிலாக பூச்சிக்கொல்லி மருந்தை ஆர்டர் செய்து, அதைக் குடித்தே தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக திருப்பரங்குன்றம் போலீஸார் வழக்குப்பதிந்து, மாணவரின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

x