தயாரிப்பாளர் எல்ரெட் குமார் ரூ.1000 கோடி வரி ஏய்ப்பு


சினிமா படத் தயாரிப்பாளர் எல்ரெட் குமாருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.1000 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அண்மையில் பைனான்சியர்கள், தொழிலதிபர்கள் வீடுகள், அலுவலகங்கள் என 25க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். இரண்டு நாட்களுக்கு மேலாக நடந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட பொருட்களின் விவரம் தற்போது தெரியவந்துள்ளது.

இதில், விண்ணைத்தாண்டி வருவாயா, கோ உள்ளிட்ட பல படங்களை தயாரித்த எல்ரெட் குமாருக்கு தொடர்புடைய வீடு, அலுவலங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.3.82 கோடி ரொக்கம், 8.4 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர, போலியான ரசீதுகள் மூலம் பொய் கணக்கு காண்பித்து ரூ.1000 கோடி வரை வரி ஏய்ப்பு செய்து பலவற்றில் முதலீடு செய்திருப்பதும் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமானவரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

x