பெரியார் வேடமிட்ட சிறுவனை மிரட்டியவர் கைது


வெங்கடேஷ் குமார் பாபு

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெரியார் வேடமிட்ட சிறுவனுக்கு எதிராக முகநூல் பக்கத்தில் கருத்து பதிவிட்ட கோவில்பட்டியை சேர்ந்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தனியார் தொலைக்காட்சியில் தந்தை பெரியார் வேடம் அணிந்து பெண் உரிமையை ஆணித்தனமாக எடுத்து வைத்த காஞ்சிபுரம் மாவட்டம், அனகாபுத்தூரை சேர்ந்த மாணவர் இளந்தமிழன் மற்றும் அவரது பெற்றோரை முதல்வர் மு.க.ஸ்டாலில் நேரில் அழைத்து பாராட்டினார். மேலும், அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாணவரையும், பெற்றோரையும் அழைத்து, சால்வை அணிவித்து பாராட்டியதோடு, பெரியார் இன்றும், என்றும் நூலை பரிசாக வழங்கினார்.

இதனிடையே, "பெரியார் வேடம் போட்ட குழந்தையை அடித்துக் கொன்று நாலு முக்கு ரோட்டில் தூக்கில் தொடங்கவிட வேண்டும். அப்போதுதான் மத்த குழந்தைகளுக்கும் அதன் பெற்றோருக்கும் பயம் வரும்" என தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை சேர்ந்த வெங்கடேஷ் குமார் பாபு (36) என்பவர் தனது முகநூல் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டிருந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த கயத்தாறு காவல்துறையினர், மக்களிடையே பீதியும், சட்டம் ஒழுங்கு பிரச்சினையையும் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்ட கோவில்பட்டியை சேர்ந்த வெங்கடேஷ் குமார் பாபு என்பவர் மீது 3 பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

x