தேனியில் வனக்காவலரை கொன்ற போலீஸ்காரர்


தேனி சரக வனத்துறையில் காவலராக பணியாற்றிவந்தவர் சரண்யா(27). இவரது கணவர் பொன்னுப்பாண்டி 3 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். இதனால் அவர் போடி தென்றல் நகரில் 2 மகள்களுடன் தனியே வசித்துவந்தார்.

இந்தச் சூழலில் இவருக்கும் மதுரை சிறப்பு காவல் படையில் போலீஸ்காரராக வேலை பார்க்கும் திருமுருகன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது முறை தவறிய உறவாக மாறியது. திருமுருகனும் ஏற்கெனவே திருமணமானவர் என்பதால், ஒரு கட்டத்துக்கு மேல் இவர்களிடையே மோதல் ஏற்பட்டது.

இந்தச் சூழலில் நேற்றிரவு போடியில் உள்ள சரண்யா வீட்டிக்கு வந்தார் திருமுருகன். அப்போது ஏற்பட்ட தகராறு முற்றி, திருமுருகன் சரண்யாவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இரவோடு இரவாக மதுரை திரும்பிய அவர், இன்று காலை மதுரை கீரைத்துறை காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதைத் தொடர்ந்து போடி போலீஸார் மதுரை வந்து அவரிடம் விசாரணை நடத்தினார்கள். வனத்துறை ஊழியரை, போலீஸார்காரரே கொலைசெய்த சம்பவம் இத்துறைகளில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

x