டயர் விளம்பரம்; நடிகர் கார்த்தி மீது காவல் ஆணையரிடம் புகார்


டயர் விளம்பரம்

சென்னை, திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்தவர் கணபதி. இவர் விவேகா இந்து இயக்கத்தில் உறுப்பினராக உள்ளார். கணபதி இன்று காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், “சமீபத்தில் பிரபல நடிகர் கார்த்தி சிவக்குமார் ‘சியட் டயர்ஸ்’ என்ற நிறுவன விளம்பரத்தில் நடித்துள்ளார். அந்த விளம்பரத்தில் நடிகர் கார்த்தி சிவக்குமார் போக்குவரத்து விதிகளை மீறும் வகையில் வாகனத்தை ஓட்டிச் செல்வது போன்று காட்சிபடுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக வாகன ஓட்டிகள் ஒருவழிப்பாதையில் வாகனங்களை ஓட்டிச் செல்வது மோட்டார் வாகன சட்டத்தின்படி குற்றம். கார்த்தி நடித்த டயர் விளம்பரத்தில் ஒருவழிப்பாதையில் வாகனத்தை ஓட்டிச் செல்வதுபோல் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது, சட்டப்படி குற்றம். கார்த்தி நடித்த இந்த விளம்பரம், வாகன ஓட்டிகளிடம் குற்றத்தைத் தூண்டும் வகையில் அமைந்திருக்கிறது.

மேலும் விளம்பரத்தில் கூறியதுபோல் சென்று விபத்து நடந்து உயிரிழப்பு நிகழ்ந்தால், அதற்கு யார் பொறுப்பேற்பது? பொறுப்பற்ற வகையில் சட்டத்தை மீறுவது போன்ற விளம்பரங்களில் நடித்த கார்த்தி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

x