நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்து வெளிவர உள்ள ‘சபாபதி‘ திரைப் படத்தின் விளம்பரம், கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதில், நடிகர் சந்தானம் ஒரு சுவற்றில் சிறுநீர் கழிப்பது போலவும், அந்தச் சுவற்றில் ‘தண்ணீர் திறந்து விடக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் திரண்டு வாரீர்’ எனவும் எழுதப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
ஹாலிவுட்டில் இருந்து காப்பி அடித்த போஸ்டரால் வெடித்த சர்ச்சை: சந்தானத்தின் பதில் என்ன?‘அண்டை மாநிலங்களிடம் தண்ணீர் கோரி தமிழகம் தொடர்ந்து போராடிவருகிறது. ஏன், சந்தானம் சார்ந்த திரை உலகமே இதற்காகப் போராட்டங்களை நடத்தியிருக்கிறது. இந்நிலையில், இந்தப் பட விளம்பரம் அந்தப் போராட்டங்களை நையாண்டி செய்வதுபோல் உள்ளது. மேலும், பொதுச் சுவற்றில் சிறுநீர் கழிப்பதுபோல் விளம்பரம் வெளியிட்டிருப்பது சட்டத்துக்குப் புறம்பான செயல்.
இதுபோன்ற விளம்பரத்தால் போராட்ட வழிமுறைகளை கொச்சைப்படுத்துவதுடன், பொது இடங்களில் சிறுநீர் கழித்தல், அதை விளம்பரப்படுத்துதல் என சட்டத்துக்குப் புறம்பான செயலில் ஈடுபட்டு வரும், நடிகர் சந்தானம் மற்றும் சபாபதி படத்தின் இயக்குநர் சீனிவாசராவ் ஆகியோர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.