மாடியிலிருந்து தவறி விழுந்து கொத்தனார் உயிரிழப்பு


சித்தரிக்கப்பட்டப் படம்

சென்னை, மயிலாப்பூர், ராமகிருஷ்ணாபுரம் 5-வது தெருவைச் சேர்ந்தவர் முருகன் (45). கொத்தனாராக வேலை பார்த்து வந்த இவர், செப்டம்பர் 15-ம் தேதி மந்தைவெளி ஆர்.கே. மடம் சாலையில் உள்ள அப்பாவு கிராமணி தோட்டத்தில் கட்டிட வேலைசெய்து வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி முதல்மாடியில் இருந்து கீழே விழுந்ததில் முருகனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகிலிருந்த சக ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து பட்டினப்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முருகன் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

x