சென்னை, நீலாங்கரையில் ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 7-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்த வாட்ஸ்அப் குழுவை பள்ளி நிர்வாகம் தொடங்கியிருக்கிறது.
இந்த வாட்ஸ்அப் குழுவில் பள்ளி மாணவர் ஒருவரின் மாமா, ஆபாச வீடியோக்களை அனுப்பியுள்ளார். இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியை ராஜகுமாரி, நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திய போலீஸார், ஆபாச வீடியோ அனுப்பிய மாணவரின் மாமா பசுபதி (28) என்பவரைக் கைது செய்தனர்.