ஆன்லைன் சூதாட்டத்தில் காவலர்கள் ஈடுபடக் கூடாது


காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளுக்கு இருந்த தடையைச் சமீபத்தில் நீதிமன்றம் நீக்கியது. இதைத் தொடர்ந்து, இணையத்தில் எங்கு திரும்பினாலும் ரம்மி விளம்பரங்களை அதிக அளவில் பார்க்க முடிகிறது.

சில தினங்களுக்கு முன்பு, காவலர் ஒருவர் ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்து துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், “ஆன்லைனில் ரம்மி விளையாடி, பணத்தை இழந்ததால், காவலர் தற்கொலைக்கு முயன்றது வேதனையளிக்கிறது. அனைவருக்கும் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய காவலர்கள் சூதாட்டத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். இதுபோன்ற செயல்கள் காவல் துறையின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது” என்று காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

மேலும், சூதாட்ட விளையாட்டில் காவலர்கள் யாரும் ஈடுபடக் கூடாது என அனைத்து காவலர்களுக்கும் சம்பந்தப்பட்ட மேலதிகாரிகள் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

x