ரிசர்வ் வங்கிக்குப் பணம் ஏற்றிச் சென்ற லாரிகள் மோதல்


சண்டிகரில், ரிசர்வ் வங்கிக்கு ரொக்கப் பணத்தை ஏற்றிச்சென்ற லாரிகள் மோதிக்கொண்ட விபத்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திங்கள்கிழமை (செப்டம்பர் 6) பிற்பகலில் சண்டிகர் ரயில் நிலையத்திலிருந்து, அந்நகரில் உள்ள ரிசர்வ் வங்கிக் கட்டிடத்துக்குக் கோடிக்கணக்கான ரூபாய் ரொக்கத்தை ஏற்றிக்கொண்டு 5 லாரிகள் சென்றுகொண்டிருந்தன. அப்போது ஒரு லாரியின் ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டதால் பின்னால் வந்த லாரி, அதன் மீது மோதியது.

இவ்விபத்தில், பாதுகாப்புப் பணியில் இருந்த 3 காவலர்கள் உட்பட 5 பேர் காயம் அடைந்தனர். 2 வண்டிகளின் ஓட்டுநர்களும் பலத்த காயம் அடைந்துள்ளனர். விபத்தில் சிக்கிய லாரிகளில் இருந்த பணப் பெட்டிகளை வேறு வாகனங்களுக்கு மாற்றுவதற்காக அந்தச் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இது எதிர்பாராத விபத்தா, சதி வேலையா எனப் போலீஸார் விசாரணை நடத்திவருகிறார்கள்.

x