நைஜீரியர்களுக்கு திருப்பூரில் என்ன வேலை?- திகில் கக்கும் பின்னணி


பைக்கில் தந்தையின் பின் அமர்ந்து செல்கிறார் அந்த இளம் பெண். இன்னொரு பைக்கில் பின்தொடரும் நைஜீரிய வாலிபர்கள் இருவர், வெட்டவெளிச் சாலையில் அந்தப் பெண்ணிடம் ‘ஊ... ஊ...’ என்று உரக்க ஊளையிட்டு சரமாரியாக பறக்கும் முத்தங்களை ஊதித் தள்ளுகிறார்கள். திருப்பூரின் நகரப் பகுதிகளில் அடிக்கடி நடக்கும் சம்பவம் இது!

“இப்டீத்தாங்க, தெருவுக்கு நாலு பேர் நம்ம பொண்ணுங்களுக்கு அநியாயத்துக்கும் தொல்லை கொடுக்குறாங்க” என்று பொங்குகிறார்கள் உள்ளூர் இளைஞர்கள். இதுமட்டுமல்ல... போதை மருந்துப் புழக்கம், போலி ஜவுளிகள் உற்பத்தி என இவர்கள் மீதான புகார் பட்டியல் நீள்கிறது. இதுபோன்ற பிரச்சினைகளால் திருப்பூரில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 15 நைஜீரியர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். சரி, இவர்கள் எப்படி இங்கே காலூன்றினார்கள்?

மும்பை டு காதர்பேட்டை

திருப்பூர் பின்னலாடை வர்த்தகம் 1980-க்குப் பிறகு பல மடங்கு அதிகரித்தது. மும்பையில் பின்னலாடைகளை வாங்கி விற்றுக்கொண்டிருந்த நைஜீரியர்கள், திருப்பூரில் விலை குறைவு என்பதால் 1990-களின் தொடக்கத்தில் காதர்பேட்டைக்கு வரத் தொடங்கினார்கள். ஆரம்பத்தில் தங்குவதற்குக்கூட விடுதிகள் அனுமதிக்கவில்லை. தரகர்கள் மூலம் அதிக வாடகைக்கு  வீடுகளைப்  பிடித்து, மெதுவாகத் தொழிலை விரிவுபடுத்தினர். அவர்கள் தான் இன்று சொந்தமாக பின்னலாடை நிறுவனங் களையே நடத்திக்கொண்டு பெரும் கூட்டமாக வாழ்கிறார்கள்.

x