கூகுள் கொள்ளை


பறிகொடுத்தவர்களுக்கு ஒரு பரீட்சை!

காதல் அழிவதில்லை என்று படம் எடுத்த விஜய டி.ஆர்., இப்போது ‘தகவல் அழிவதில்லை’ என்று ஒரு படம் எடுக்கலாம். சொல்லப்போனால், ‘தகவல் அழிவதில்லை’ என்பது இயற்பியலின் அடிப்படை விதிகளில் ஒன்று. அந்த விதியைத்தான் வியாபாரமாக்கி வருகின்றன கூகுள், ஃபேஸ்புக் உள்ளிட்ட இணைய ஜாம்பவான் நிறுவனங்கள்.

கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்காவும் ஃபேஸ்புக்கும் சேர்ந்து மக்களின் தரவுகளை அரசியல்வாதிகளுக்குத் தாரைவார்த்தது சமீபத்தில் அம்பலமானது. அதைத் தொடர்ந்து, ஃபேஸ்புக்கிடமும் கூகுளிடமும் நம்மைப் பற்றிய தகவல்கள் எந்த அளவுக்கு ‘கொள்ளையடித்து’ச் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்பதை ஆராய்ந்திருக்கிறார் ‘டேட்டா ஆலோசகர்’ டைலன் கரன். கண்டுபிடித்த அதிர்ச்சிகளை ‘கார்டியன்’ இதழில் அவர் கட்டுரையாக்க... அது இப்போது இணையத்தில் வைரலாகியிருக்கிறது. இணையத்தில் நம் விவரங்கள் திருடப்படுகின்றன என்பது பொத்தாம் பொதுவாகத் தெரிந்தாலும் புள்ளிவிவரமாகத் தெரியாது அல்லவா! அதற்கு உதவி செய்து, நம்மை அதிர வைக்கிறார் டைலன் கரன்.

நீ போகுமிடமெல்லாம் கூகுளும் வரும் போ, போ, போ!

x