இணையத்தில் பறிபோகும் அந்தரங்கம்!


முகநூல் விவகாரம் நம்மை முச்சந்தியில் நிறுத்தியிருக்கிறது. சொல்லப்போனால், ஆடையில்லாமல் வீதியில் நிறுத்தியிருப்பதாகவே தோன்றுகிறது. ஆடையை அவர்கள் உருவினார்களா இல்லை, நாமே அவிழ்த்துப் போட்டோமா? யோசித்துப் பார்த்தால் இரண்டும்தான். அவர்கள் உருவிப் போடுவதற்கு நாம் உதவியிருக்கிறோம்! எப்படி?

ஒருவர் தனது மனைவியுடன் நெருக்கமாக தனது ஆண்டிராய்டு மொபைலில் படம் எடுக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அது அவரது/மனைவியின் விருப்பம், உரிமை, அந்தரங்கம். ஆனால், அந்தப் படம் அவரது மொபைலின் உள்பெட்டியில் மட்டும்தான் இருக்கிறதா? ‘ஆம்’ என்று நம்பினால் அவரைப் போன்ற முட்டாள் வேறெவரும் இல்லை.

நாம் நமது மொபைலில் எடுக்கும் புகைப்படங்களை அடுத்த சில நிமிடங்களில் ஃபேஸ்புக் நிறுவனம் ‘இவற்றையெல்லாம் உங்கள் ஃபேஸ்புக் சுவரில் பகிர விருப்பமா?’ என்று நமது ஃபேஸ்புக் பக்கத்திலேயே வரிசையாகக் காட்சிப்படுத்திக் கேட்கிறது. இதற்கு என்ன அர்த்தம்?

சுயத்தை அழித்த இணையம்!

x