அது நேத்திக்கு.. இது இன்னிக்கு…


வங்கி மோசடியில் மாதம் ஒரு ஆள் என்று வரிசையாக அடுக்கலாம்போல இருக்கிறது! நீரவ் மோடி மோசடியே இன்னும் பேசித் தீராத நிலையில் அடுத்த வரவாக வந்திருக்கிறார் ‘கனிஷ்க் ஜூவல்லர்ஸ்’ பூபேஷ்குமார் ஜெயின்!

ரூ.824 கோடி கடனுக்காக 14 வங்கிகள் பூபேஷ்குமாரை இனி சுற்றி வர வேண்டும். சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு 2007-ல் தொடங்கப்பட்ட ‘கனிஷ்க்’ நிறுவனத்துக்கு, 2008-ல் ஸ்டேட் வங்கி முதலில் கடன் கொடுத்தது.

ஒவ்வொரு ஆண்டும் விற்பனை மற்றும் லாபத்தை அதிகரித்துக் காட்டி, அடுத்தடுத்த வங்கிகளில் கடன் வாங்கியிருக்கிறார். எந்தச் சரிபார்ப்பும் இல்லாமல், அவர் சொல்லியதை அப்படியே நம்பி ஏமாந்து நிற்கின்றனர் வங்கி அதிகாரிகள். பதைபதைத்து நிற்கிறது பொதுஜனம்!

  • ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பூபேஷின் பெற்றோர் 2 தலைமுறைகளாகத் தங்க நகை தொழில் செய்துவருகின்றனர்.
  • “பூபேஷ் வருமானத்துக்கு ஆசைப்பட்டு நிறைய இடங்களில் கிளைகள் தொடங்க வங்கிகளில் கடன் வாங்கினார். நினைத்தது நடக்காததால் கடனாளி ஆகிவிட்டார்” என்கிறார்கள் கனிஷ்க் ஊழியர்கள்.
  • எடை குறைவானநகைகளைத் தயாரிப்பதற்காக இத்தாலி, துருக்கி, அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளிலிருந்து  நவீன இயந்திரங்களை இறக்குமதி செய்தது கனிஷ்க்.
  • 80 நபர்களுடன் தொடங்கப்பட்டகனிஷ்க் நிறுவனத்தில், 2017-ம் ஆண்டில் சுமார் 900 நபர்கள் ஊழியர்களாக இருந்தனர்.
  • ஒவ்வொரு ஆண்டும் விற்பனை மற்றும் லாபத்தை அதிகரித்துக் காட்டி, அடுத்தடுத்த வங்கிகளில் கடன் வாங்கியிருக்கிறார் பூபேஷ் குமார்.
  • கடந்த ஆண்டுசெப்டம்பரில், ரூ.20 கோடி கலால் வரி ஏய்ப்புக்காக பூபேஷ்குமார் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்தே கனிஷ்க் நிறுவனத்தின் மோசடிகள் தோண்டப்பட்டன.
  • பூபேஷ் தந்த ஆவணங்களை ஏன் சரிபார்க்கவில்லை என்று கேட்டால், ஆள் பற்றாக்குறை நாங்கள் என்ன செய்வது? என்று பொறுப்புடன்(!) பதில் சொல்கிறார் கடன் கொடுத்த ஒரு வங்கியின்அதிகாரி.
  • சென்னையைச் சேர்ந்த புகழேந்தியின் நிலத்தை வங்கியில்ரூ.42 கோடிக்கு அடமானம் வைத்ததாகவும் பூபேஷ்குமார் மீதுவழக்கு பாய்கிறது.
  • பூபேஷ்குமார்ஜெயின், மனைவி நீதா ஜெயின், பங்குதாரர்கள் தேஜ்ராஜ் அச்சா, அஜய் குமார், சுமித் கேடியா இவர்களுக்கு உடந்தையாக இருந்த வங்கி அதிகாரிகள், ஆடிட்டர்கள் மீதும் சிபிஐ வழக்கு பாய்கிறது.

x